முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

By Thahir 1 மாதம் முன்

முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துமனை தெரிவித்துள்ளது.

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் | Mulayam Singh S Health Continues To Be A Concern

82 வயதான முலாயம் சிங் யாதவிற்கு மருத்துவர்கள் ஆரம்பம் முதலே தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கேட்டறிந்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை மேதாந்தா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் | Mulayam Singh S Health Continues To Be A Concern

அதில் முலாயம் சிங் யாதவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.