கட்சி மாறியதால் பாதுகாப்பு வாபஸ் - முகுல் ராயின் இசட்+ பாதுகாப்பை திரும்பப் பெற்ற மத்திய அரசு
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியப் புள்ளியான முகுல் ராய் கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக அபரிவிதமான வளர்ச்சி அடைந்தது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி முன்னிலையில் கடந்த வாரம் இணைந்தார்.
இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணையம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் முகுல் ராயின் 'இசட்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மாநில அரசின் காவல்துறையால் முகுல் ராயிக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முகுல் ராய் தான் பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.