பும்ராவிற்கு பதில் இவரா! உலகக்கோப்பையில் வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியுடன் முகேஷ் சவுத்ரி, சேத்தன் சகாரியா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேக் அப்
T20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியுடன் முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சகாரியா அக்டோபர் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். இருவரும் பேக் அப் பிளேயர்களாக அணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
முன்னதாக, முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அதுகுறித்து பிசிசிஐ எதுவும் அறிவிக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
டி20 தொடர்
மேலும் உலக கோப்பை 2022 தொடரில் இருந்தும் அவர் விலகியதாக பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக அறிவித்தது. முதுகுத்தண்டில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டதால் அவர் விலகியுள்ளார். முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் டி20 தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளும் இன்று அக்டோபர் 4-ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 3வது டி20 போட்டி நடைபெற உள்ளது.