வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் அம்பானியின் வீடு...! - வைரலாகும் வீடியோ

Viral Video Mukesh Dhirubhai Ambani
By Nandhini 3 மாதங்கள் முன்

75-வது சுதந்திர தினம்

இன்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அரசியல் தலைவர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்கு சென்று இந்திய தேசிய கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

சமூகவலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவரும் 75-வது சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

பிரதமர் மோடி

இன்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Mukesh Ambani

வண்ணமயமாக காட்சியளிக்கும் அம்பானி வீடு

இந்நிலையில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலி அம்பானியின் இல்லத்தை அப்பகுதியில் செல்பவர்கள் வியப்புடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

அம்பானி இல்ல வழியாக செல்பவர்களுக்கு 75-வது சுதந்திர தின விழாவையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.