15,000 கோடி ஆன்டிலியா வீட்டை விட்டு காலி செய்யும் அம்பானி குடும்பம்? ஏன் இந்த நிலை!
முகேஷ் அம்பானி தனது 15000 கோடி மதிப்புடைய வீட்டை காலி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆன்டிலியா வீடு
முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான 15,000 கோடி மதிப்புள்ள பெரும் ஆடம்பர வீடு ஆன்டிலியா. இந்த வீடு மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் ஒரு ஆடம்பர சாலையில் உள்ளது.
இதில் மொத்தம் 27 மாடிகள், தனி தியேட்டர், ஸ்பா, ஸ்னோ ரூம், ஒரு கோவில், தொங்கும் தோட்டம், ஜிம், நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. இந்த வீடு இருக்கும் நிலத்தை கரீம் போய் இப்ராஹிம் என்பவர் வக்பு வாரியத்திற்கு தானாக வந்து வழங்கியதாக கூறப்படுகிறது.
காலி செய்யும் நிலை
கரிம்போய் கோஜோ அறக்கட்டளை, ஏப்ரல் 2002ல் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சுமார் ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால், வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை தனியாருக்கு விற்க சட்டத்தில் இடம் இல்லை என மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இதில் தீர்ப்பு அம்பானி குடும்பத்திற்கு எதிராக சென்றால், முகேஷ் அம்பானி குடும்பம் நிலத்தை காலி செய்ய வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வக்பு வாரிய சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வக்புக்கு சொத்தினை தானமாக கொடுப்பவர், குறைந்தது 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அதன்படி வேறு மதத்தினர் மற்றும் 5 ஆண்டுகளுக்குள் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் சொத்துகள் வக்பு சொத்தாக இனி மாற்ற முடியாது. ஒரு சொத்துக்கு உரிமை இல்லாதவர்கள், வக்புக்கு சொத்து கொடுக்க இயலாது.