முகேஷ் அம்பானி இல்ல வெடிகுண்டு வழக்கு: என்.ஐ.ஏவுக்கு மாற்றம்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் வீடருகே மர்ம வாகனம் கண்டறியப்பட்டது. அதில் வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மர்ம வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்திற்கு உரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் பெரிய சதித்திட்டம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏவுக்கு) மாற்றி மத்திய உள்துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது.
இனி இந்த வழக்கை மும்பை போலீசுக்கு பதிலாக என்.ஐ.ஏ விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.