ஒரு காலத்துல ஹோட்டலில் வேலை செய்தவர்... இப்போ முகேஷ் அம்பானியை விட பணக்காரர் - யார் இந்த CZ?

business mukesh ambani binance ceo changpeng zhao
By Nandhini Jan 11, 2022 07:37 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கஷ்டப்பட்டு உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். வெற்றி கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பதற்கு உதாரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நபர்களை நாம் சுட்டிக்காட்டலாம்.

அந்தவகையில் தற்போது சமூகவலைத்தளத்தில் இணைந்துள்ளார் சங்ப்பெங் சாவோ (Changpeng Zhao). இவரைச் சுருக்கமாக CZ என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த சங்ப்பெங் சாவோ இப்போது தனது சொத்து மதிப்பில் இந்தியாவின் முக்கிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

சங்ப்பெங் சாவோ சீனாவில் பிறந்தவர். இவர் தனது 12 வயதில் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார். கணினி அறிவியலில் பட்டப்படிப்பினை முடித்த இவர், தனது இளமைக்காலத்தில் பல்வேறு சிறிய சிறிய வேலைகளை செய்து வந்துள்ளார். குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய நினைத்த சாவோ உலகப்புகழ் பெற்ற மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திலும் தனது இளமைப்பருவத்தில் வேலை செய்துள்ளார்.

கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், மென்பொருள் கட்டமைப்பாளராக பணியைத் துவங்கிய சாவோ, கிரிப்டோ கரன்சி மீதுள்ள ஆர்வத்தால் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு வேலை செய்யத் தொடங்கினார்.

பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த சாவோ, கடந்த 2007ம் ஆண்டு பினான்ஸ் (Binance) நிறுவனத்தைத் தொடங்கினார். கிரிப்டோ கரன்சி எக்சேஞ் நிறுவனமான Binance சாவோ-வின் வாழ்க்கையையே மாற்றி விட்டது.

44 வயதான அவரது சொத்து மதிப்பு 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முகேஷ் அம்பானியை இவர் முந்தி இருக்கிறார்.

ப்ளூம்பெர்க் இண்டெக்சின் படி இந்தியாவின் முகேஷ் அம்பானி 92.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து வைத்துள்ளார். சாவோவின் உண்மையான சொத்துமதிப்பு இதற்கும் கூடுதலாக இருக்கும் எனவும் பேச்சுகள் அடிப்படுகின்றன.