குடும்ப நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய அம்பானி குடும்பத்தினர்....! - வைரலாகும் வீடியோ...!

Viral Video Festival Mukesh Dhirubhai Ambani
By Nandhini Jan 20, 2023 06:43 AM GMT
Report

நேற்று நடைபெற்ற குடும்ப நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய அம்பானி குடும்பத்தினரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அம்பானி குடும்ப நிச்சயதார்த்தம்

இந்திய அளவில் பணக்காரர்களில் டாப் 5ல் இருக்கும் ஒருவரும், இந்திய வர்த்தகத்தில் முன்னணியாக இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாலிவுட் திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

mukesh-ambani-anant-ambani-engagement-event

மேடையில் நடனமாடிய அம்பானி குடும்பத்தினர்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மேடையில் முகேஷ் அம்பானியும், அவரது மனைவியும் மற்றும் குடும்பத்தினரும் நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.