33 வருட சிறைவாசம் - இலங்கை புறப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்!
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராஜீவ்காந்தி வழக்கு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் உடல்நலக்குறைவால் சாந்தன் அண்மையில் மரணமடைந்தார். முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
தாயகம் திரும்பிய மூவர்
தொடர்ந்து மூவரும் தாய்நாட்டிற்கு செல்ல விரும்பிய நிலையில், இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. அதன்படி, திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
#WATCH | Chennai, Tamil Nadu: Rajiv Gandhi assassination case convicts- Muguran, Robert and Jayakumar deported to Sri Lanka from Chennai airport this morning.
— ANI (@ANI) April 3, 2024
Murugan, Jayakumar and Robert were staying in the Trichy refugee camp. pic.twitter.com/EZxpFpi1lT
அதன்பின், மூவரும் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், முருகனின் மனைவி நளினி சென்னை விமான நிலையம் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்.