முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பெண் புலி உயிரிழப்பு
By Irumporai
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பெண் புலி உயிரிழந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி சேற்றில் சிக்கி இறந்த கிடந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அதே இடத்தில் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
உயிரிழந்த புலி
இதையடுத்து புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் வயது முதிர்வு, நுரையீரல் பாதிப்பு காரணமாக புலிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது