வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து 5 பேர் காயம்: முதுகுளத்தூரில் பரபரப்பு

people vote Mudukulathur booth
By Jon Apr 06, 2021 01:29 PM GMT
Report

முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு, கண்டிலான் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று வாக்களிப்பதற்காக சென்ற வாக்காளர்களான தாமோதரன், புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது சமுதாயக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.  

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து 5 பேர் காயம்: முதுகுளத்தூரில் பரபரப்பு | Mudukulathur Injured Roof Polling Booth Collapses

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு கொண்செல்லப்பட்டு சிகிச்சை அளித்து பின்னர் வீடு திரும்பினர்.