முதல்வன் பட பாணியில் ஒருநாள் விவசாயியாக மாறிய ஹெச்.ராஜா
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு வேட்பாளர்களும், வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். துணி துவைப்பது, டீ போடுவது, பரோட்டா போடுவது, தோசை சுடுவது என பல வழிகளில் மக்களுடன் ஒன்றிணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா, விவசாய வேலைகளை செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி விவசாயி எனும் எம்.ஜி.ஆரின் பாடலை பின்னே ஒலிக்கவிட்டு ஹெச்.ராஜா மாட்டுக்கு வைக்கோல் வைப்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
— H Raja (@HRajaBJP) March 24, 2021