வெளியானது வலிமை திரைப்படம்..! ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியானது.
அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருக்கும் திரைப்படம் வலிமை.
பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே வலிமை திரைப்படம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக அதிகாலை முதலே திரையரங்கில் அஜித் ரசிகர்கள் குவிந்திருந்தனர். கூடியிருந்த ரசிகர்கள் பட்டாசுக்கள் வெடித்தும் மேளம் தாளம் முழங்க ஆட்டம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan