முபின் நெஞ்சில் பாய்ந்த ஆணிகள் : பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்

Tamil nadu Crime
By Irumporai Nov 08, 2022 05:29 AM GMT
Report

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் நிகழ்ந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது

கோவை குண்டு வெடிப்பு

 முபின் பலியான கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அன்றைய தினமே தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏராளமான ஆணிகள், கோலிக்குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

முபின் நெஞ்சில் பாய்ந்த ஆணிகள் : பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல் | Mubin Post Mortem Report Information

இந்த நிலையில் தற்போது முபினின் உடல் பிரேத பரிசோதனை குறித்த விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முபின் உடலை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இற்நத முபின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.   

வெளியான பிரேத பரிசோதனை தகவல் 

அப்போது முபின் உடல் முழுவதும் 2 இன்ச் அளவுள்ள ஏராளமான ஆணிகள் குத்தியிருந்தன. அதில் ஒரு ஆணி இடதுபக்க மார்பில் பாய்ந்திருந்தது. அந்த ஆணி முபினின் இதயத்தை துளைத்திருந்தது.

இதனாலேயே முபின் உடனடியாக அந்த இடத்திலேயே பலியாகி இருக்கிறார் என்ற விவரங்கள் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

   முபின்காரில் அவர் வைத்திருந்த ஆணிகள் வெடித்து அவரது உடலையும், மார்பையும் துளைத்து முபின் , குண்டு வெடிப்பு நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் பிணமாகத்தான் அங்கிருந்து மீட்கப்பட்டார்.

முபின் தற்கொலைப்படையாக செயல்பட்டாரா அல்லது சதிச்செயலுக்கு திட்டமிட்டு அவரே அந்த சதியில் சிக்கி இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது