மகளிர் இலவச பேருந்து சேவையில் குறைப்பு இல்லை: சமூக வலைத்தள வதந்திக்கு MTC விளக்கம்
Tamil nadu
TVK
By Vinoja
சென்னையில் மகளிர் இலவச பேருந்து சேவையில் 100 சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மறுத்துள்ளது.
MTC விளக்கம்
கடந்த மார்ச் மாதம் முதல் மகளிர் இலவச பயணத் திட்டத்தின் கீழ் 1,724 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போதும் அதே எண்ணிக்கையிலான பேருந்துகளே சேவையில் உள்ளதாகவும் MTC தெரிவித்துள்ளது.

பேருந்து சேவையில் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் MTC வலியுறுத்தியுள்ளது.