தோனி கெட்டிகாரர், அவரின் மூளை படு ஷார்ப் - புகழ்ந்து தள்ளிய சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை மனதார பாராட்டியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வீரேந்திர சேவாக்.
'நடப்பு ஐபிஎல் லீக்கில் மிகவும் கூர்மையான மூளை கொண்டவர் என்றால் அது தோனி தான்' என அவர் தெரிவித்துள்ளார்.
தோனியின் கேப்டன்சி திறனை உலகமே அறியும். ஆட்டத்திற்கு முன்னதாக பிளான் எதுவும் செய்யமாட்டார். களத்தில் நடக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பார்.
எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பவுலர்களை பந்து வீச பணிப்பார். ஒரு பேட்டஸ்மேன் வேகப்பந்து வீச்சை சுலபமாக கையாண்டால் சுழற்பந்து வீச்சை கொண்டு வருவார்.
அதுவே சுழற்பந்து என்றால் வேகத்தை களம் இறக்குவார். அதற்கு ஒரு உதாரணம் தான் நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் விக்கெட்.
அதற்கு அவர் சூப்பராக ஃபீல்ட் செட் செய்திருந்தார். என்னை பொறுத்தவரையில் ஆட்டத்தில் திருப்புமுனையை கொண்டு வந்தது பொல்லார்ட் விக்கெட் தான்.
ஹேசல்வுட்டை களம் இறக்கி, அவரை முடித்துவிட்டார். அதனால் தான் உறுதியாக சொல்கிறேன் நடப்பு சீசனில் செம ஷார்பான மூளையை கொண்டவர் தோனி' என தெரிவித்துள்ளார் சேவாக்.