தோனி இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை - மனம் திறந்த விராட் கோலி

MS Dhoni Virat Kohli T20 World Cup
By Thahir Oct 17, 2021 09:42 AM GMT
Report

இந்திய அணியின் ஆலோசகராக தோனி பயணிக்க இருப்பது குறித்து கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்திய டி20 அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படபோகும் கடைசி தொடர் இதுவாகும். எனவே அவர் கோப்பையை வென்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார்.

[XO1HLH ]

இந்தியாவுக்காக 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. தற்போது ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வென்றுக்கொடுத்துள்ளார்.

எனவே அவரை இந்திய அணியின் ஆலோசகராக பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் தோனி ஆலோசகராக செயல்படுவது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். மீ

ண்டும் இந்திய அணியில் இணைவது குறித்து தோனி மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்றுமே எங்களுக்கு ஆலோசகராக தான் இருந்துக்கொண்டு வருகிறார்.

தற்போது மிகப்பெரும் தொடர்களை அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் எதிர்கொள்வதனால் மீண்டும் அந்த பணியை செய்ய தோனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத்தனை வருடங்களாக தோனி கற்றுக்கொண்ட அனுபவங்களை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். ஆட்டத்தின் நுணுக்கங்கள், ஆட்டம் எப்படி சென்றுக் கொண்டிருக்கிறது,

சிறிய விஷயம் மூலம் அதனை எப்படி நமது பக்கம் கொண்டு வரலாம் என்பதற்கெல்லாம் தோனி பாயின் அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவும்.

தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும், தூண்டுக்கோலாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.