ஓ நண்பனே நண்பனே..நண்பனே நீ என்றுமே..வெற்றியின் நண்பனே..தோனியை கட்டிப்பிடித்த விராட் கோலி

MS Dhoni CSK Virat Kohli RCB Viral Photo
By Thahir Sep 25, 2021 06:45 AM GMT
Report

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி,சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை கட்டிப்பிடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.

ஓ நண்பனே நண்பனே..நண்பனே நீ என்றுமே..வெற்றியின் நண்பனே..தோனியை கட்டிப்பிடித்த விராட் கோலி | Msdhoni Virat Kohli Rcb Csk Viral Photo

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து, இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

சிறப்பாக விளையாடிய கோலி 53 ரன்கள் அடித்திருந்த போது பிராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த படிக்கல் 70 ரன்களை விளாசி பெவிலியன் திரும்ப அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியற இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து,களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனால், 2-ம் இடத்தில் இருந்த சென்னை 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. இந்த நிலையில்,சிஎஸ்கே ஆர்சிபியை வீழ்த்திய பிறகு எம்எஸ் தோனியை விராட் கோலி கட்டிப்பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலியின் சிறப்பு அணைப்பு: வெற்றி ,தோல்வி என்பது சாதாரணம் என்பதை உணர்த்துவது போல,விராட் ,முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி மீதான தனது அன்பை மீண்டும் நிரூபித்தார்.

தோல்வியை தழுவியும் மகிழ்ச்சியான மனநிலையில் விராட் கோலி தோனியை பின்னால் இருந்து இழுத்து கட்டிப்பிடித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால்,இரண்டு கேப்டன்களுக்கிடையேயான சிறப்புப் பிணைப்பைப் பற்றி பேசும் ஐபிஎல் ரசிகர்களின் ட்வீட்கள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.