"அதே வலிமை..வேகம்" - குதிரைக்கு டஃப் கொடுத்த தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Evergreen Dhoni @msdhoni #dhoni #MSDhoni #Yellove @ChennaiIPL pic.twitter.com/OBLonTRSlp
— I_khillu (@Khilendra01) June 13, 2021
கொரோனா காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தனது பண்ணை வீட்டில் குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதைக் கழித்து வருகிறார்.
இதனிடையே தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தோனியும், அவர் வளர்த்துவரும் போனி என்ற குதிரையும் பண்ணை வீட்டில் உற்சாகமாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு வலிமை, வேகம், விளையாட்டு நேரம், பந்தயம் என சாக்ஷி கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
தோனி மின்னல் வேகத்தில் ஓடுவதில் கெட்டிக்காரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் ஃபிட்டாக குதிரைக்கு சவால் விடும் வகையில் ஓடுவதாக ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil