தோனியின் அதிரடி ஆட்டத்திற்கு தலை வணங்கிய ரவீந்திர ஜடேஜா..!

MS Dhoni Ravindra Jadeja IPL 2022
By Thahir Apr 22, 2022 01:37 AM GMT
Report

நேற்று நடைபெற்ற 33வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். மும்பையில் பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக பட்சமாக திலக் வர்மா 51 ரன்களும்,சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி துவக்கத்தில் தடுமாறியது.

தொடக்க ஆட்டக்காரரான அம்பத்தி ராயூடு 40 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

சென்னை அணிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது.பும்ராஹ் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சென்னை அணி 11 ரன்கள் குவிக்க உதவியாக ப்ரெடோரியஸ், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் வந்த பிராவோ ஒரு ரன் ஓடியதன் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தோனியின் அதிரடி ஆட்டத்திற்கு தலை வணங்கிய ரவீந்திர ஜடேஜா..! | Msdhoni Ravindra Jadeja Bowed His Head

இதையடுத்து கடைசியில் எப்போது ப்னிசிங் கொடுக்கும் தல தோனி களத்தில் இருந்தார். 4 பந்துகளில் 1 சிக்சர்,இரண்டு பவுண்டரிகளை அடித்து மிரட்டி கடைசி பந்தில் மும்பை வீழ்த்தி சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து வெற்றி பெற்று திரும்பிய தல தோனியை கை கொடுத்து குலுக்கி வரவேற்ற ரவீந்திர ஜடேஜா தலைவணங்கினார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.