விஜய்யை சந்தித்த தோனி- இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

msdhoni ThalapathyVijay Actorvijay thalathalapathy
By Petchi Avudaiappan Aug 12, 2021 09:07 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 நடிகர் விஜய்யை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே விளம்பர பட ஷூட்டிங் தொடர்பாக அங்கு வருகை தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி விஜய்யை சந்தித்து பேசினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.