சிங்கம் களம் இறங்கிடுச்சு..சென்னை வந்தார் தல தோனி - சிஎஸ்கே நிர்வாகிகளுடன் ஆலோசனை

MS Dhoni CSK Meeting Players Selection IPL 2022
By Thahir Jan 27, 2022 08:29 PM GMT
Report

ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் உள்ளது. இதற்காக ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

கொல்கத்தா அணி மாதிரி ஏலத்தை நடத்தி, ரசிகர்களையும் பங்கேற்க வைத்துள்ளது. இது போல் பல அணிகளும் பல திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக தோனி சென்னை வந்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து, அதற்கான அணியை தயாரிக்கும் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி அறிவுறுத்தியுள்ளார். 

இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க சி.எஸ்.கே. திட்டம் போட்டுள்ளது. அதே நேரத்தில் சீனியர்களையும் கைவிட்டு விட கூடாது என்ற நிலைப்பாட்டில் தோனி உள்ளார்.

அதாவது, ஒரே அடியாக புதிய வீரர்களை கொண்டு வந்தால், அதற்கான பலன் தெரிய குறைந்தது மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகும்.

இதனால் மாற்றத்தை மெதுவாக கொண்டு வருவதே தோனியின் திட்டம். அதாவது வரும் சீசனிலும் வெற்றி வேண்டும், அதே சமயம் எதிர்காலத்தையும் கருத்தில கொள்ள வேண்டும் என்ற யுத்தியை தான் தோனி கையாள உள்ளார்.

இதே போன்று முடிந்தவரை, சென்னை அணிக்காக ஏற்கனவே விளையாடிய சீனியர்களை மீண்டும் குறிவைத்து எடுக்க தோனி முடிவு எடுத்துள்ளார்.

அப்படி செய்தால் ,மற்ற அணிகள் புதிய அணியை கட்டமைப்பதற்குள்,சென்னை அணி பழைய வீரர்களை வைத்தே இரண்டு, மூன்று தொடரில் நன்றாக விளையாடி விட முடியும்.

ஏலத்தில் 17 வீரர்களை எடுப்பது என்றால், அதில் குறைந்தது 7 பழைய வீரர்களை மீண்டும் எடுக்க தோனி முடிவு எடுத்துள்ளார்.

இதனால் டுபிளஸி, பிராவோ, லுங்கி கிடி, அம்பத்தி ராயுடு, சர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்ற சென்னைக்காக விளையாடிய வீரர்களை தோனி குறிவைக்க உள்ளார்.

அதற்கு, ஏலத்தில் எப்படி கையாள்வது, பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று மூன்று பிளான்கள் குறித்து தோனி சென்னையிலேயே தங்கி ஆலோசனை செய்ய உள்ளார்.