சாரி ப்யூட்சர் பார்ட்னர்..தோனியின் மனைவி முன் தன் காதலை வெளிப்படுத்திய இளம் பெண்
தோனியின் மனைவி சாக்ஷி தோனி முன்னிலையில் தோனி மீதான தன் காதலை ஒரு இளம் பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
2018-ல் ஐபிஎல் போட்டி ஒன்றின் போது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தோனி மீதான தன் காதலை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.
அதுவும் தோனி மனைவி சாக்ஷி தோனி முன்னிலையில். அந்த ரசிகை 'தோனி மீதுதான் என் முதல் காதல்' என்று பேனரைக் காட்டினார்.
ஐசிசி அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தன் சமூக ஊடகத்தில் வெளியிட்டது. அந்தப் பெண் காட்டிய அந்த பேனரில், "மன்னிக்கவும் எதிர்கால துணைவரே! தோனிதான் எப்போதும் என் முதல் காதலர், ஐ லவ் யூ மாஹி என்று எழுதியிருந்தது.
ஒரு ரசிகை இப்படி என்றால், இன்னொரு ரசிகை தோனிக்கு பிரியாவிடை போட்டி இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் அதற்கு தோனி கடைசி போட்டி சென்னையில்தான் ஆடுவேன் என்று உறுதி அளித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
இன்னும் ஒரு சீசன் மஞ்சல் ஆர்மியை வழிநடத்துவதையும் அவர் தெரிவித்தார். எனவே சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி ஆட்டத்தை கண்டு களிக்கக் காத்திருக்கின்றனர் தல ரசிகர்கள்.
? @msdhoni ?#CSKvRR #IPL2018 pic.twitter.com/j2t5Scuwzs
— ICC (@ICC) April 20, 2018