சிஎஸ்கே அணியில் சலசலப்பு தோனியிடம் வீரர்கள் வாக்குவாதம் - வெளியான பகீர் தகவல்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக சிஎஸ்கே அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

14வது ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லீக் ஆட்டங்கள் முடிவுற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் ஏற்கனவே சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெறாமல் விமர்சனங்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சென்றது.

ஆனால் தகுதிப்பெற்ற பின் நடைபெற்ற ஆட்டங்களில் மீண்டும் பெரியளவில் சொதப்பி வருகிறது. கடைசியாக நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டி மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

ப்ளே ஆஃப் சுற்று நெருங்கிவிட்ட நிலையில் சிஎஸ்கே இப்படி சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் இன்று அதனை மாற்றி அமைக்கும் போட்டி நடைபெறவுள்ளது. சிஎஸ்கே - பஞ்சா கிங்ஸ் அணிகள் இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப்-க்குள் செல்வதற்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது.

எனவே இதில் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகான ப்ளேயிங் 11 குறித்து அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அணியின் நட்சத்திர வீரர் சாம் கரண் வெளியேறிவிட்டார். இதுவே தோனிக்கு பிரச்னையாக இருக்கும் சூழலில் ரெய்னா vs உத்தப்பா சண்டை இன்னும் தலைவலி கொடுத்துள்ளது.

ரெய்னாவின் ஃபார்ம் மோசமாக இருந்துவந்ததால் கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் உட்காரவைக்கப்பட்டார்.

ஆனால் அவரின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி தோனி சமாளித்துவிட்டார். ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பா முதல் முறையாக களமிறக்கப்பட்டார்.

ஆனால் அவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்து களத்திலேயே ராபின் உத்தப்பா 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்து அவர் வெளியேறினார்.

எனவே இவர்கள் இருவரில் யாரை இன்றைய போட்டிக்காக தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அணிக்குள் எழுந்துள்ளது.

ப்ளே ஆஃப் நெருங்கும் நேரத்தில் அனுபவ வீரரை உட்காரவைப்பதா, அல்லது ஒரே ஒரு போட்டியில் விளையாடியிருக்கும் உத்தப்பாவை உட்காரவைப்பதா என்ற குழப்பத்தில் தோனி இருப்பதாக தெரிகிறது. எனினும் தோனி உத்தப்பாவையே தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like This


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்