தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது தான்..சென்னை அணியில் இருந்து விடைபெறுகிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கி விட்டதால் ஐபிஎல் போட்டி சம்பந்தமான கருத்துக்களை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியுள்ளார்.
2020 ஐபிஎல் தொடரிலிருந்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் சொதப்பி வரும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, சென்னை அணிக்கு ஆலோசகராக மட்டுமே செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால் அதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங் “என்னைப் பொருத்தவரையில் சென்னை அணியின் ஆலோசகராக மட்டும் எம்எஸ் தோனி இருக்கவில்லை மாறாக அவர் தான் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருக்கிறார்.
அவருடைய கேப்டன்ஷிப் தான் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒன்றாகும் என்று பேசியுள்ளார்.
மேலும் தற்பொழுது சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவதில் மட்டுமே தங்களது நோக்கமாக கொண்டுள்ளது, இந்த ஆண்டு சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்தபின் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்து விடுவார்” என்று நினைப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.