நீங்க இந்த தவறை மட்டும் செய்யாதீங்க தோனிக்கு அட்வைஸ் கொடுத்த ஆகாஸ் சோப்ரா
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியில் ஜடேஜா, டூவைன் பிராவோவிற்கு பிறகு தான் தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் டி.20 தொடரின் லீக் போட்டி நேற்று நிறைவடைந்ததன. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி இன்று (அக் 10) நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
ரசிகர்களை போலவே இந்த போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னாள் வீரர், இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை தெரிவிப்பதோடு, இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை டெல்லி இடையேயான இந்த் போட்டி குறித்து தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா,
இந்த போட்டியில் தோனி, ஜடேஜா மற்றும் பிராவோவிற்கு பிறகு தான் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், 'என்னை பொறுத்தவரையில் இந்த போட்டியில் தோனி முன்னதாக பேட்டிங் செய்ய வர மாட்டார் என கருதுகிறேன்.
ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோர் தோனிக்கு முன்னதாக பேட்டிங் செய்வார்கள் என கருதுகிறேன், அதுவே சென்னை அணிக்கும் பயனுள்ளதாக அமையும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, ரெய்னா இன்றைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதை கணிக்க முடியவில்லை.
காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா கடந்த போட்டிகளில் விளையாடவில்லையா அல்லது அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்பதும் தெரியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
