பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி திணறல் - தோனி கவலை
பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, முதல் இரு இடங்களில் ஒன்றைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகக்கடினம் என்கிற நிலையே உள்ளது.
12 புள்ளிகளுடன் உள்ள மும்பையும் கொல்கத்தாவும் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றாலும் சிஎஸ்கேவை பஞ்சாப் வென்றாலும்
அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையாது. துபையில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே அணியில் மாற்றம் எதுவுமில்லை. பஞ்சாப் அணியில் பூரனுக்குப் பதிலாக ஜார்டன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கெய்க்வாட் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களம் இறங்கிய மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.மேலும் விளையாடி ராபின் உத்தப்பா 2 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார்.
பாப் டூப்ளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு களத்தில் ஆடி வருகின்றனர்.சிஎஸ்கே அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 32 ரன்கள் மட்டும் எடுத்து திணறி வருகிறது.