எப்போவும் நாங்க தான் முதலிடம்..சிக்ஸர் பட்டியலில் சிஎஸ்கே வீரர்கள் முன்னிலை

MS Dhoni IPL 2021 Players CSk
By Thahir Oct 04, 2021 02:08 PM GMT
Report

ஐபிஎல் 2021 போட்டியில் சிக்ஸர் அடிப்பதில் சிஎஸ்கே அணி வீரர்கள் முன்னணியில் உள்ளார்கள். ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன.

4-ம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற 4 அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் சிக்ஸர் போட்டியில் சிஎஸ்கே அணி 96 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

எப்போவும் நாங்க தான் முதலிடம்..சிக்ஸர் பட்டியலில் சிஎஸ்கே வீரர்கள் முன்னிலை | Msdhoni Ipl2021 Csk Players

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்சிஸ், மொயீன் அலி, ராயுடு என நால்வரும் குறைந்தது 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள்.

வேறு எந்த அணியிலும் இத்தனை வீரர்கள் குறைந்தது 15 சிக்ஸர்களை அடிக்கவில்லை. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்கள்

சென்னை - 96

ராஜஸ்தான் - 84

பஞ்சாப் - 83

கொல்கத்தா - 73

பெங்களூர் - 70

ஹைதராபாத் - 64

மும்பை - 63

டெல்லி - 44

ஐபிஎல் 2021: சிஎஸ்கே வீரர்கள் அடித்த சிக்ஸர்கள்

ருதுராஜ் - 20 சிக்ஸர்கள்

டு பிளெஸ்சிஸ் - 18

மொயீன் அலி - 16

ராயுடு - 15

ஜடேஜா - 9

ரெய்னா - 9

பிராவோ - 4

சாம் கரண் - 3

தோனி - 2

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கே.எல். ராகுல் - 22

ருதுராஜ் - 20

மேக்ஸ்வெல் - 19

மயங்க் அகர்வால் - 18

டு பிளெஸ்சிஸ் - 18