ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிய சிஎஸ்கே - தீவிர பயிற்சியில் வீரர்கள்

MS Dhoni CSK IPL 2021 Players
By Thahir Sep 26, 2021 06:05 AM GMT
Report

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிய சிஎஸ்கே  - தீவிர பயிற்சியில் வீரர்கள் | Msdhoni Ipl2021 Csk Players

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் 9 ஆட்டங்களில் 7ல் வெற்றி பெற்று சிஎஸ்கே தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9க்கு 4 போட்டிகளில் வென்று நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகிவிடும் என்பதால் பலரும் இன்றைய நாள் ஆட்டத்திற்காக ஆவலாக காத்துள்ளனர்.