ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு

MS Dhoni CSK IPL 2021 Play Off
By Thahir Oct 10, 2021 01:39 PM GMT
Report

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 ஆட்டம் துபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு | Msdhoni Ipl2021 Csk Dc Play Off

லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் மோதுகின்றன.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டெல்லியில் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.