அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? தோனி என்ன சொல்றாரு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக பாதியில் வெளியேறிய அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என சென்னை அணியின் கேப்டனான தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் 30வது போட்டியான நேற்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு, தோனி, ரெய்னா உள்பட சீனியர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும்,
இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 156 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களான டி காக் மற்றும் அன்மோல்ப்ரீட் சிங்கை, தீபக் சாஹர் தனது துல்லியமான பந்துவீச்சால் வெளியேற்றினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (3), இஷான் கிஷன் (11), பொலார்டு (13) என மும்பை அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் கொடுத்ததாலும்,
இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரைசதமும் அடித்த சவுரவ் திவாரியும் அதிரடியாக விளையாட தவறியதாலும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
மும்பையை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ள சென்னை அணி அடுத்ததாக செப் 24ம் தேதி அடுத்த போட்டியில் விளையாட உள்ள நிலையில்,
அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என தோனி தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக பாதியில் வெளியேறிய அம்பத்தி ராயூடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயூடு கையில் முறிவு ஏற்படவில்லை என நம்புகிறேன்.
அவரும் சிரித்து கொண்டு தான் உள்ளார். அடுத்த போட்டிக்கு இன்னும் 4 தினங்கள் உள்ளதால் அம்பத்தி ராயூடு அடுத்த போட்டிக்குள் முழு உடற்தகுதி பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.