என்னது.. தீ குச்சி மருந்தை கொண்டு தோனியின் முகமா?
தீ குச்சிகளின் மருந்தை கொண்டு சந்துரு ராம்குமார் என்பவர் தோனியின் படத்தை வரைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் தல தோனி.இவருடைய பிறந்த நாள் வருகிற 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த சந்துரு ராம்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்,பல தீ பெட்டிகளின் தீ குச்சிகளை எடுத்து அதில் உள்ள மருந்தையும்,குச்சியையும் தனியாக பிரித்தெடுக்கிறார்,பின்னர் ஒரு ஷீட்டில் தீ குச்சி மருந்துகளை தோனியின் உருவத்தை போன்று வடிவமைத்து வைக்கிறார். அதன் பின் அந்த மருந்துகளை தீயால் பற்ற வைக்கிறார்.பின்பு எரிந்த தீ குச்சி மருந்துகளை ஷீட்டில் இருந்து அப்புறப்படுத்துகிறார்.இதனையடுத்து தோனியின் முகம் அழகாக உருவாக்கப்படுகிறது.
தீ குச்சி மருந்துகளை கொண்டு அவர் உருவாக்கிய தோனியின் முகம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.