"நல்ல நண்பன் கெட்ட நண்பன்லாம் இல்ல, நண்பன்னாலே நல்லவன்தான்" - வைரலாகும் தோனி-யுவராஜ் சிங் சந்திப்பு

viral video yuvraj singh msd thala meets yuvi
By Swetha Subash Dec 07, 2021 01:24 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் இரு தூண்களாக விளங்கியவர்கள் தோனி மற்றும் யுவராஜ் சிங்.

களத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் நண்பர்களாக விளங்கி வந்த இந்த ஜோடிக்கு 2011ஆம் ஆண்டுக்கு பிறகு யுவராஜ் சிங்கின் தந்தையால் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கும், தோனியும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என ரசிகர்கள் யோசித்த நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியானது.

அதில் ஒரு நபர் யுவராஜின் வீட்டு கதவை தட்டி பந்தை தூக்கி யுவராஜ் சிங்கிடம் எறிந்தார்.

அந்த நபரின் முகம் வீடியோவில் காட்டப்படவில்லை என்றாலும், தற்போது வைரலான சந்திப்பு புகைப்படத்தின் மூலம் வீடியோவில் வந்த நபர் தோனி தான் என்று தெளிவாகிறது.

யுவராஜ் சிங்கும், தோனியும் இணைந்து புதிய தொழில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான விளம்பரம் தான் இது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சிலர், இருவரும் இணைந்து கிரிக்கெட் பயிற்சி மையத்தை நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எதற்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், தோனியையும், யுவராஜையும் இப்படி ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரின் ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.