இரண்டு மேட்ச் தான் ஆடப்போகிறார்...தோனி ஓய்வு? வெளியான தகவல் - கலங்கும் ரசிகர்கள்!
மே 12 லீக் போட்டியுடன் தோனி ஒய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனி ஓய்வு
நடப்பாண்டின் ஐபில் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எப்போதும் இல்லாத சர்ச்சை தற்போது தோனி பக்கம் திரும்பி வருகிறது. முன்னதாக சிஎஸ்க்கே - பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் அவர் 9ம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தது பல விமர்சனகளுக்குள்ளானது.
அதேபோல தோனி பவுண்டரி அடிப்பதில் மட்டும் தன் இருக்கிறார் ரன் எடுக்க தயங்குவதாக பலர் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான காரணம் அண்மையில் வெளியானது. அதாவது தற்போது விளையாடி வரும் அவருக்கு முழங்கால் தசைநார் கிழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கலங்கும் ரசிகர்கள்
இந்த நிலையில் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவது உறுதி என தெரிகிறது. இந்த 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் அதற்கு முன் நடக்க உள்ள இரண்டாவது தகுதிப் போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்றால் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப்க்கு முன்னேறும்.
ஒருவேளை ராஜஸ்தான் அணியுடன் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் தோனிக்கு அதுவே கடைசி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக பெங்களூருவில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும், சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய போட்டியுடன் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.