பயமா எனக்கா.!கேப்டன் பதவி குறித்து பேசிய ஜடஜோ...
எங்கள் கூடவே தோனி இருப்பதால் கேப்டன்சி குறித்து பெரிதாக கவலை எதுவும் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தோனியை ஏலம் எடுக்க முயன்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்த ஏலம் எடுத்தது.
தன் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வைத்துள்ள நம்பிக்கையையும்,ரசிகர் ஏமாற்ற கூடாது என்ற அடிப்படையில் தோனி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றின் மிக முக்கிய நாயகனான தோனி இன்னும் ஓரிரு வருடங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து பேசிய ஜடேஜா “சென்னை அணியை வழிநடத்த எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது, அதேவேளையில் தோனி போன்ற பெரிய ஜாம்பவானின் இடத்தை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல.
இருந்தபோதிலும் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிச்சயம் சரியாக செய்ய முயற்சிப்பேன், தோனியுடன் இருப்பதால் கேப்டன்சி குறித்து நான் பெரிதாக கவலைப்பட ஒன்றும் இல்லை. எனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தோனியிடம் கேட்டு கற்றுக்கொள்வேன்.
சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.