காயத்தால் அவதி; ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்குவாரா தோனி - சிஇஓ தகவல்
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவது குறித்து காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
தோனி காயம்
16வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அனிகளிடம் வெற்றிபெற்றுள்ளது.
சென்னை அணியில் விளையாடும் வீரர்களை விட, காயத்தால் சிகிச்சை பெற்று வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஜேமிசன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
சிஇஓ தகவல்
இதனைத் தொடர்ந்து சிமர்ஜித் சிங் காயத்தால் களமிறங்கவில்லை. பின்னர் ஜேமிசனுக்கு மாற்று வீரராக வந்த மகாளா காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். தொடர்ந்து தோனியும் முழங்காலில் காயத்தால் அவதியடைந்துள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் அடுத்த போட்டியில் களமிறங்காமல் ஓய்வெடுப்பது குறித்து தோனி இதுவரை எதுவும் சொல்லவில்லை.
அதனால் ரசிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை.
அதேபோல் பென் ஸ்டோக்ஸ் இன்னும் 2 வாரங்களில் குணமடைந்துவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.