அஸ்வினை ரொம்ப கடுமையாக திட்டினார் தோனி : மனம் திறந்த சேவாக்

angry sehwag msdhoni IPL 2014
By Irumporai Oct 01, 2021 10:42 AM GMT
Report

எம்.எஸ்.தோனிக்கு அஸ்வினின் செய்கை பிடிக்கவில்லை, அஸ்வின் மீது மிகவும் கோபமடைந்து அஸ்வினை கடுமையாகக் கண்டித்தார் என முன்னாள் கிரிகெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

அஸ்வின் மோர்கன் விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.  இதற்கு டிம் சவுதி ஏதோ கூற அஸ்வின் பதில் கூற மோர்கன் புகுந்து தரக்குறைவாகப் பேசியதுதான் இப்போது பெரிய விவகாரமாகியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக  பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மட்டும் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்காவிட்டால் இது விவகாரமே ஆகியிருக்காது என்று சேவாக் கூறியதோடு இப்படிப்பட்டதையெல்லாம் வெளியில் வந்து சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்கு உதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிடும் போது அஸ்வின் இதற்கு முன்னால் ஒருமுறை அநாகரீகமாக நடந்து கொண்டதையும் சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

தான் பஞ்சாபுக்கு ஆடிய போது மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதைக் கொண்டாட தரையிலிருந்து மண்ணை எடுத்து ஊதி செய்கை செய்தார். இப்படிக் கொண்டாடினார் அஸ்வின். எனக்கு அஸ்வின் அப்படிச் செய்தது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

ஆனால் நான் பொதுவெளியில் வந்து அஸ்வின் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றோ இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லை என்றோ கூறவில்லை. அது அதோடு முடிந்தது. ஆனால் எம்.எஸ்.தோனிக்கு அஸ்வினின் செய்கை பிடிக்கவில்லை, அஸ்வின் மீது மிகவும் கோபமடைந்து அஸ்வினை கடுமையாகக் கண்டித்தார்." இவ்வாறு கூறினார் சேவாக்.