இந்த வீரரை மட்டும் தோனி நீக்கவே மாட்டார் - அடித்து சொல்லும் விரேந்திர சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ வீரர் சுரேஷ் ரெய்னா குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
நேற்று நடைபற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக சுற்றுக்குத் தகுதி பெற்றது.
2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 11 போட்டியில் 9 வெற்றியுடன் 18 புள்ளிகளைப் பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுமாராக விளையாடி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்து அசத்தி உள்ளது.
என்னதான் 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறந்த முறையில் விளையாடி வந்தாலும், அந்த அணியின் அனுபவ வீரர் சுரேஷ் ரெய்னா பெயர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை
11 போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் 157 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், மிடில் ஆர்டர்களில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா சொதப்பி வருவதால் சென்னை அணிக்கு சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பாக செயல் படவில்லை என்பது தோனிக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அதற்காக ரெய்னாவை நீக்கிவிட்டு மாற்று வீரரை தோனி எடுக்கவில்லை.
இதற்கு முக்கியமான காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெப்த் பேட்டிங் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்டுள் தாகூர் வரை அனைவரும் மிக சிறந்த முறையில் பேட்டிங் விளையாட கூடியவர்கள்
இதன் காரணமாகவே மகேந்திர சிங் தோனி, ரெய்னாவின் விளையாட்டு குறித்து கவலைப்படவில்லை. ரெய்னா இதுவரை விளையாடிய போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை
இருந்தாலும் அவர் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து வருகிறார் இது அவருடைய அனுபவத்தை காட்டுகிறது என்று ரெய்னா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.