தோனி உலகக் கோப்பை வென்றார்... அது எல்லோருக்கும் நடந்து விடுமா...? - மனம் திறந்து பேசிய அஸ்வின்...!

MS Dhoni Ravichandran Ashwin Rohit Sharma Virat Kohli
By Nandhini Jan 30, 2023 03:06 PM GMT
Report

தோனி பொறுப்பேற்றவுடன் உலகக் கோப்பைடியை வென்றார். ஆனால், அது எல்லோருக்கும் நடந்து விடுமா? என்று இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

மனம் திறந்து பேசிய அஸ்வின்

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வெல்ல முடியாமல் போனதற்கு, விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஐசிசி கோப்பைகள் வென்றதன் அடிப்படையில் ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது.

எந்த ஒரு வீரருக்கும் நேரம் கொடுக்கவேண்டும். இந்திய ஜாம்பவான் சச்சினுக்கே உலகக் கோப்பையை வெல்ல 6 வாய்ப்புகள் தேவைப்பட்டது. ஒரு வீரர் இதை வெல்லவில்லை, அதை வெல்லவில்லை என்று மிக சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால், 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பிறகு இந்தியா எதையும் வெல்லவில்லை.

ms-dhoni-virat-kohli-rohit-sharma-ashwin-cricketer

1992, 1996, 1999, 2003, 2007 என 5 உலகக் கோப்பைகளில் சச்சின் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். ஆனால், அவரே வெற்றி பெறவில்லை. இதன் பிறகு 2011ம் ஆண்டு தான் அவர் எதிர்பார்த்த உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது. ஆனால், எம்.எஸ்.தோனி உலகக் கோப்பைகளை தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே வென்று விட்டார். ஆனால், அது அனைவருக்குமே நடந்து விடாது.

கோலி, ரோகித் இருவரும் 2007 உலகக் கோப்பையில் வெல்லவில்லை. 2011 தொடரில் ரோஹித் விளையாடவில்லை. கோலி மட்டுமே 2011, 2015, 2019 மூன்று தொடர்களில் விளையாடி வருகிறார்.

இப்போது 2023ம் ஆண்டு தொடர், அவருடைய 4வது உலகக் கோப்பையாக இருக்கப்போகிறது. அவர் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றுள்ளார். 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார். அதே தொடரில் ரோஹித் சர்மாவும் வென்றுள்ளார் என்றார்.