சில நேரம் பிராவோவ கீப்பிங் பன்ணவிட்டு , நான் ஏன் பவுலிங் போடக்கூடாதுன்னு யோசிச்சிருக்கேன் : பிராவோவை பங்கம் செய்த தோனி

MS Dhoni TATA IPL IPL 2022
By Irumporai Apr 28, 2022 11:28 AM GMT
Report

பிராவோவை பயங்கரமாக கலாய்த்து தோனி பேசிய வீடியோ வைரல் ஆகிவருகிறது .

நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகிக் கொண்டார். இதனால், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட தோனி, பேட்டிங்கில் இந்த முறை பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், தோனி, பிராவோ மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருக்க, சில புகைப்படங்களை காட்டி அதற்கு விளக்கங்கள் கேட்கப்படுகிறது. இதில், பிராவோவுடன், தான் இருக்கும் புகைப்படம் பற்றி தோனி கலகலப்பாக சொன்னது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தோனி பிராவோ குறித்து சொல்லும்போது : இத்தனை ஆண்டுகளில் நான் பிராவோவிடான் பவுலிங் எவ்வாறு செய்ய வேண்டுன் என கூறியதிலை ஆனால் எப்படி பந்து வீசக் கூடாது என கூறியுள்ளேன். அதே சமயம் , சில முயற்சிகளை எடுக்க வேண்டாம் என கூறுவேன்.

சில சமயங்களில் பிராவோவின் ஓவரில் ரன்கள் செல்ல ஆரம்பிப்பதை பார்க்கும் போது, அவரிடம் கீப்பிங் க்ளவுஸை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாமா என்று கூட யோசித்துள்ளேன்.

அதை விட ஒன்றும் மோசமாக நான் நிச்சயம் பந்து வீச மாட்டேன்" என சிரித்துக் கொண்டே தோனி பதில் சொல்ல இதைக் கேட்ட மற்றவர்களும் சிரிக்க , இந்த வீடியோ தற்போது இணைய்த்தில் வைரலாகி வருகிறது.

இது வரை நடந்த ஐபிஎல் தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. அடுத்ததாக மே 1ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.