Tuesday, May 20, 2025

தமிழ் சினிமாவில் கலமிறங்கும் தல தோனி - லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கைக்கோர்க்கிறார்

Nayanthara MS Dhoni
By Swetha Subash 3 years ago
Report

தல தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கலமிறங்கும் தல தோனி - லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கைக்கோர்க்கிறார் | Ms Dhoni To Produce Nayanthara Film In Tamil

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான மகேந்திர சிங் தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் எம்.எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கலமிறங்கும் தல தோனி - லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கைக்கோர்க்கிறார் | Ms Dhoni To Produce Nayanthara Film In Tamil

அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை முதல் கட்டமாக அவர் தயாரிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.