அழகன் தான் அவன் தான் ...அழகா அளவா அவன் சிரிப்பானே.. :புது லுக்கில் தோனி வைரலாகும் புகைப்படங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தமிழ் ரசிகர்களால் தல என்று அழைக்கபடும் தோனியின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கபடும் தோனியின் புதிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
2019 உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத தோனி, கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்த நிலையில் தோனியின் புது லுக் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் தோனி செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார். அதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் புகழ்பெற்ற ஹெர் ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் அக்கிம் தோனியின் புதிய ஹெர் ஸ்டைலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய ஸ்டைலை வடிவமைத்தது மிகவும் மகிழ்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.