மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய தோனி

MS Dhoni
By Swetha Subash May 13, 2022 01:03 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நேற்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கடுமையாக சொதப்பி போட்டியை தோற்றிருக்கிறது சென்னை அணி. ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டம் தொடங்கியே வேகத்திலேயே பவர் பிளேக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்தது.

மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய தோனி | Ms Dhoni Talks About The Reason Chennai Failed

கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தேவான் கான்வே. ஆனால், நேற்று இந்த மைதானத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது கான்வேயுடைய விக்கெட்தான். போட்டி தொடங்கிய முதல் 10 பந்துகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்த 3 விக்கெட்டுகளுக்கு சென்னை அணி டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை. கான்வே, மொயின் அலி, உத்தப்பா ஆகியோர் அவுட்டாகினர். இதில் மொயின் அலி கேட்சில் அவுட் ஆகினார். கான்வே, உத்தப்பா எல்பிடபிள்யூவில் அவுட்டாகினர். கான்வே போட்டியின் முதல் ஓவரிலேயே அவுட்டாகினார். அவரால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

கான்வே எல்பிடபிள்யூவில் அவுட்டாகவில்லை. இருந்தாலும் அவர் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்கிற ஒரு மோசமான நிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த பிளேயர்களும் பிரெஸர் காரணமாக அவுட்டாகினர். இதனால் சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4-இல் வெற்றி ,8-இல் தோல்வி என ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய தோனி | Ms Dhoni Talks About The Reason Chennai Failed

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது,

“விக்கெட் எப்படி இருந்தாலும், 130 ரன்களுக்கு கீழே உள்ள ஸ்கோரை கட்டுப்படுத்துவது மிக கடினம். எங்கள் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் நன்றாகப் பந்துவீசினார்கள், நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் தங்களைத் தாங்களே நம்புவதற்கு இது போன்ற ஒரு விளையாட்டு அவர்களுக்கு உதவுவதாக நம்புகிறேன்.

மேலும் சில பேட்ஸ்மன்கள் நல்ல பந்துகளில் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.