பாகிஸ்தானை தோற்கடிக்க தீவிரம் காட்டும் தோனி - வீரர்களுக்கு கடும் பயிற்சி
பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதற்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஆனால் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாளை மாலை துபாயில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுப்பதற்காக நேரடியாக களமிறங்கியுள்ளார் கேப்டன் எம்.எஸ்.தோனி.
வலைப்பயிற்சியின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானின் பந்துவீச்சு எப்படி இருக்கும்,
அமீரக களத்தில் எப்படி அதனை சமாளிக்க வேண்டும் என அந்த நேரத்திலேயே அவர்களுக்கு அறிவுரையையும் தோனி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு ஆலோசகராக மட்டுமின்றி தற்போது ஒரு பயிற்சியாளராக தோனி உருவெடுத்து வருவது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
