பார்ட்டியில் ஹுக்கா புகைத்து தள்ளிய எம்எஸ் தோனி; அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரல் Video!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஹுக்கா புகைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. ஆனால் ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் பயணம் சென்று தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் தோனி, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஹுக்கா புகைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில், தோனி புகைப்பது என்பது இது முதல்முறையல்ல என்றும் விளம்பர படப்பிடிப்பிற்காக ஹுக்கா புகைக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், இதனை நம்ப முடியவில்லை என்றும் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Smoking hookahs never looked this cool ?
— dhoni the only cricket legend (@thalasonkunal) January 7, 2024
MS the trendsetter ??#Dhoni #FireBoltt pic.twitter.com/3KOpy7JQQW

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
