உயிர் நண்பருக்காக தோனி செய்த செயல் - ஆனால் கடைசியில் நிகழ்ந்த சோகம்

தனது நண்பனின் உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோபனம் தோனியின் மனதுக்குள் ஆறாத வடுவாக இன்றளவும் அமைந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நண்பர் சந்தோஷ் லால் அடிப்படையில் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் ஆவார். அவர்தான் தோனியின் டிரேட்மார்க் ஆட்டமான ஹெலிகாப்டர் ஷாட்டை அவருக்குக் கற்றுக் கொடுத்தவர்.

அந்த கிரிக்கெட் ஷாட்டை கற்றுக்கொள்ள சந்தோஷூக்கு சமோசாக்களை தோனி வாங்கிக் கொடுப்பாராம். ஒரு முறை இந்திய அணி சார்பாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செல்ல இருந்த தோனிக்கு சந்தோஷ் உடல்நிலை சரியாக இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக தோனி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை வர வைத்தார். ராஞ்சிக்கு வரவேண்டிய ஹெலிகாப்டர் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக வாரணாசியில் தரையிறங்க வேண்டியதாக இருந்தது.

அந்த சமயத்தில் தீவிர சிகிச்சை அளித்த போதும் சந்தோஷ் லால் மரணத்தை தழுவினார். இந்த சம்பவம் தோனியின் மனதிற்குள் இன்றுவரை மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்