சென்னையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் பார்த்த எம்.எஸ்.தோனி - வைரலாகும் வீடியோ!

MS Dhoni Chennai Super Kings Chennai IPL 2024 Manjummel Boys
By Jiyath Mar 24, 2024 04:57 PM GMT
Report

கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி நேற்று இரவு சென்னையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை பார்த்துள்ளார். 

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

சென்னையில்

இதில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, மார்ச் 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

மஞ்சும்மல் பாய்ஸ்

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் அவர் கண்டுகளித்துள்ளார்.

சென்னையில்

எம்.எஸ்.தோனியுடன் பந்துவீச்சாளர் தீபக் சஹாரும் உடனிருந்தார். படம் முடிந்து வெளியே வந்த தோனியை பார்த்த ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.