கெட்ட வார்த்தைல திட்டுவார்னு பயந்தேன் - ஐபிஎல் அனுபவம் குறித்து பகிர்ந்த தோனி

MS Dhoni IPL 2023
By Sumathi Apr 15, 2023 10:43 AM GMT
Report

2023 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல்

இந்நிலையில், ஐபிஎல் குறித்து தோனி சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில், “ஆரம்ப காலங்களில் ஐபிஎல் அணிகள் எப்படி செயல்படும் என்ற ஆர்வம் இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் அது மிகவும் புதிய சூழ்நிலைகளாகும். குறிப்பாக அப்போது தான் முதல் முறையாக நீங்கள் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் சூழ்நிலை ஏற்பட்டது.

கெட்ட வார்த்தைல திட்டுவார்னு பயந்தேன் - ஐபிஎல் அனுபவம் குறித்து பகிர்ந்த தோனி | Ms Dhoni Recalls 2008 Ipl

அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது. எடுத்துக்காட்டாக மேத்யூ ஹைடனை என எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அவர் சென்னை அணிக்கு வந்ததும் என்னை இடது வலது மற்றும் நேராக நிற்க வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டுவார் என்று நினைத்தேன்.

 தோனி தகவல்

ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாக அவர் தான் எங்களை அழைத்து எங்களுடைய அணியின் மீட்டிங்கிற்கு தலைமை தாங்கி முக்கியமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். குறிப்பாக பிரட் லீ’யை நான் என்று அவர் முதல் திட்டமாக எங்களிடம் தெரிவித்தார்.

கெட்ட வார்த்தைல திட்டுவார்னு பயந்தேன் - ஐபிஎல் அனுபவம் குறித்து பகிர்ந்த தோனி | Ms Dhoni Recalls 2008 Ipl

அந்த சமயத்தில் அது எனக்கு சரியாக புரியவில்லை என்பதால் அதைப் பற்றி நான் அவரிடம் விவரமாக கேட்டேன். அப்போது அவர் இறங்கி வந்து பிட்ச்சின் பாதி தூரத்தில் பிரட் லீ’யை எதிர்கொள்வேன். அடுத்த நாள் நடைபெற்ற போட்டியில் அவர் சொன்னது போலவே 2வது பந்திலேயே இறங்கி சென்று பிரெட் லீ’யை எதிர்கொண்டார்.

அந்த மாதிரியான அணுகு முறையை அவர் கொண்டிருந்தது மிகவும் வித்தியாசமானது. நான் ஏலத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பினேன். குறிப்பாக 3 அணிகளில் மார்க்கியூ வீரர்கள் இல்லாமல் இருந்ததால் 2 அணிகள் என்னை பெரிய தொகைக்கு வாங்கும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் நடைபெற்ற ஏலத்தில் நான் 1.5 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டதை ஏற்கனவே எதிர்பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.