எல்லோருக்கும் ஹீரோ நீங்க தான் - தோனிக்கு ரசீத்கான் புகழாரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் எம்எஸ் தோனியின் கையெழுத்திடப்பட்ட ஜெர்சியை போட்டியின் முடிவுக்கு பின் கேட்டு பெற்றுக்கொண்டார்.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்று 2021 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது,
மேலும் அதே போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கையெழுத்திட்ட ஜெர்சியை மஹேந்திரசிங் தோனியின் கையால் பெற்றார்.
மேலும் மகேந்திர சிங் தோனியிடம் அறிவுரை கேட்டுக் கொண்டிருந்தார் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.