கோல்ப் விளையாட்டு: முன்னாள் அதிபருக்கு ஆட்டம் காட்டிய எம்எஸ் தோனி - வைரலாகும் வீடியோ!
எம்எஸ் தோனி அமெரிக்க முன்னாள் அதிபருடன் கோல்ப் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் கேப்டனுமாவார் மகேந்திர சிங் தோனி.
இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய காலிறுதி ஆட்டத்தை நேரில் சென்று கண்டு களித்தார்.
இதனை தொடர்ந்து தோனியை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேஷனல் கோல்ப் கிளப்பில் அவருடன் கோல்ப் விளையாட ஏற்பாடு செய்திருந்தார்.
கோல்ப் விளையாட்டு
இதில் டிரம்புடன், தோனி கோல்ப் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படங்களை துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சங்விதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
MS Dhoni playing golf with Donald Trump.
— Johns. (@CricCrazyJohns) September 8, 2023
- The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ
மேலும் 'இந்த நிகழ்வை ஏற்படுத்தியதற்கு நன்றி ஜனாதிபதி' என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.